அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
அழகான முக பாவனைகள் மூலம் தமிழ் இளைஞர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் என சில படங்களில் மட்டுமே நடித்தார். அதன்பிறகு பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் உடன் திருமணம் முடிந்த பின்னர் நடிப்பிலிருந்து விலகிருந்தார். அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த நஸ்ரியா தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கவுள்ளார். ஆனால், இது படம் அல்ல வெப் தொடர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு நடிக்கிறார். இதனை டைரக்டர் ஏ. எல். விஜய் தயாரிக்கிறார். இந்த வெப் தொடரை சூர்யா பிரதாப் இயக்குகிறார் . விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.