ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஒரு திரைப்படம் எப்படி இருக்கப் போகிறது என்பதன் சுருக்கமான வீடியோவை டிரைலர் என வெளியிட்டு 80களில் ஆரம்பித்து வைத்தனர். அப்போதெல்லாம் தியேட்டர்களில் இடைவேளை நேரங்களில் இந்த டிரைலர்கள் அதிகம் திரையிடப்பட்டன. ஹாலிவுட் படங்கள், ஜாக்கிசான் படங்கள் இப்படி திரையிடப்பட்டது. அதன்பின் தமிழ் சினிமாவிலும் டிரைலர்கள் உருவாக்கப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கின.
சாட்டிலைட் டிவிக்கள் வந்த பிறகு அந்த டிரைலர்களை டிவி சேனல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்தன. டிரைலர்களை வீடியோ முன்னோட்டம் என தமிழில் குறிப்பிடுவார்கள். டிரைலர்களைத் தவிர்த்து சிறிய முன்னோட்டமாக டீசர் என்ற ஒன்று பின்னர் அறிமுகமானது. கடந்த சில வருடங்களில் டிரைலர்கள், டீசர்கள் தான் அதிகமாக மாறி மாறி வர ஆரம்பித்தன.
சமீபமாக 'க்ளிம்ப்ஸ்' என ஒன்றை அறிமுகம் செய்தார்கள். சமீபத்தில் சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்திற்கு 'க்ளிம்ப்ஸ்' வெளியானது. ஷாரூக்கான், நயன்தாரா நடிக்கும் ஹிந்திப் படமான 'ஜவான்' படத்திற்கு 'பிரிவியூ' என்ற பெயரில் ஒரு வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டார்கள். அடுத்து 'ஷோகேஸ்' என புதிதாக ஒன்றை ஆரம்பிக்கிறார்கள்.
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்திற்கு இன்று மாலை 6 மணிக்கு 'ஷோகேஸ்' வெளியாகிறதாம். அதில் என்ன இருக்கப் போகிறது என்பதற்கு இன்னும் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். இனி, படத்திற்குப் படம் புதிதாக ஏதாவது ஒரு பெயரில் வீடியோ வெளியிடுவது டிரென்ட் ஆக மாறிவிடும்.