திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு |
கடந்த 2008ம் ஆண்டில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் சுப்ரமணியபுரம். 1980கள் காலக்கட்டத்தை கண்முன் நிறுத்திய படம். காதல், நட்பு, துரோகம், பழிவாங்கல் ஆகியவற்றை கூறிய இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, சுவாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ‛‛கண்கள் இரண்டால்..., மதுர குலுங்க குலுங்க...'' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்த படம் திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் தமிழகம் முழுக்க ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். அதில், ‛‛ஆகஸ்ட் 4ம் தேதி 2023 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கங்களில் சுப்ரமணியபுரம் மீண்டும் வெளியிடப்படும். அந்த அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பெறுங்கள்'' என அவர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.