ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 108வது படமான பகவந்த் கேசரி என்ற படத்தில் நடித்துள்ளார். காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பாலகிருஷ்ணாவின் வழக்கமான அதிரடி ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகும் என இன்று படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இதே தேதியில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படமும் வெளியாகிறது. லியோ படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதே தேதியில் தான் ரிலீஸாக போகிறது. இதன் மூலம் விஜய் படமும், பாலையா படமும் நேரடியாக மோதுகிறது. அதேசமயம் என்னதான் விஜய் படம் என்றாலும் அந்த மாநிலத்தில் பாலகிருஷ்ணாவின் படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும். இதனால் விஜய் படத்திற்கு குறைந்த தியேட்டர்களே கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.