ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சந்தானம் ஹீரோவாக நடித்த பின் அவருக்கு கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியை தந்த படம் ‛தில்லுக்கு துட்டு'. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாம் பாகமும் ‛டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. நாயகியாக சுரபியும் முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.
இப்பட விழாவில் பேசிய நடிகர் சந்தானம், “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னார்கள். ஆனால் இந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தை முழுக்க முழுக்க சந்தானம் படமாக உருவாக்கி உள்ளோம். தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றன. அதேபோல இந்தப் படமும் மக்களின் மனங்களை கவரும் என நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேய் கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படத்தை பிரேம் ஆனந்த் உருவாக்கியுள்ளார்” என்று சந்தானம் பேசினார்.