Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாதனை படைக்கும் சலார் படம்!

18 ஜூலை, 2023 - 01:43 IST
எழுத்தின் அளவு:
Record-breaking-film-Salaar!

கே.ஜி.எப் 1,2 பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் சலார். பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் பிஸ்னஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை அமெரிக்காவில் மட்டும் 1979 திரைகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதுதான் இந்திய சினிமாவிலேயே அதிக திரைகளில் வெளியாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெளிநாடுகளில் இந்த படத்தை 5000 திரைகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்!தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்திய ... கொலை படத்தின் கடைசி டிரைலர் இன்று வெளியாகிறது! கொலை படத்தின் கடைசி டிரைலர் இன்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)