சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் |
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கடந்த மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே ஜூலை மாதத்தில் டீசர் வெளியாகும் என்று அறிவித்தனர். இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஜூலை 28ல் சம்பவம் இருக்கு... கில்லர் கில்லர்" என பதிவிட்டு தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.