படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்காக சமீபத்தில் வெளிநாடு சென்று மார்க்ஷியல் கலைகளை பயின்றுவிட்டு திரும்பினார் சிம்பு. இந்த படத்திற்காக ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து படப்பிடிப்புக்காக நீண்ட தலைமுடியும் வளர்த்து வந்தார். இந்த நிலையில், தற்போது மலேசியாவில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த சிம்பு, அங்குள்ள விமான நிலையத்தில் செல்லும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. அதில், நீண்ட தலைமுடி மற்றும் தாடி, முறுக்கு மீசை கெட்டப்பில் கூலிங் கிளாஸ் அணிந்தபடி இருக்கிறார் சிம்பு. இதைப் பார்த்த நெட்டிசன்கள், இதுதான் சிம்பு 48 வது படத்தின் கெட்டப்பா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.