ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' |
நடிகர் ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தனது 16வது படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார். இந்த படத்தை 'இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கவுள்ளார். இயக்குனர் சுகுமார் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வில்லன் கதாபாத்திரம் இல்லை என்கிறார்கள். ஏற்கனவே, இந்த பட இயக்குனர் இயக்கத்தில் உப்பெனா படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.