பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் சினிமா உலகில் பலரும் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள். தங்களை அவரது ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அவர்கள் எந்தவிதத் தயக்கமும் காட்டியதில்லை. கமல்ஹாசனுக்கு 'விக்ரம்' படம் மூலம் பெரும் வசூலையும், வெற்றியையும் தேடித் தந்த இயக்குனர் தன்னை கமல்ஹாசனின் ரசிகர் என்பதை பலமுறை குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் ரசிகராக மட்டுமல்லாது அவரை மாறுபட்ட கோணத்தில் காட்டிய ஒரு 'ரசிக இயக்குனர்' என்றும் சொல்லலாம்.
கமல்ஹாசன் நடித்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'வேட்டையாடு விளையாடு' படம் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆகி தற்போது இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதைக் குறிப்பிட்டு கமல்ஹாசன் ரசிகர் ஒருவர், கமல்ஹாசனின் ரசிக இயக்குனர்களில் முதலிடத்தைப் பிடித்தது கவுதம் மேனன்தான், மன்னிக்கவும் லோகேஷ் கனகராஜ் ப்ரோ” என டுவிட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார்.
அந்த டுவிட்டருக்கு லோகேஷ் கனகராஜ், “டவுட்டே வேணாம் ப்ரோ, கவுதம் சார் தான்” என பதிலளித்துள்ளார். ஆனால், இயக்குனர் கவுதம் மேனன், “இருந்தேன்….நீங்கள் வரும் வரை, 'நாயகன் மீண்டும் வரான்' வரும் வரை…விக்ரம்..நான் முயற்சி செய்து அதற்கு மேலும் உயர வேண்டும். இது ஒரு நல்ல சவாலாக இருக்கும் லோகேஷ்…ஆனா, இந்த சண்டையில சட்டை கிழியாது…வெறும் அன்பு மட்டுமே,” என லோகேஷுக்கு பதில் தெரிவித்துள்ளார்.
கவுதமின் பதிலுக்கு, “நிறைய அன்பும், மரியாதையும் உங்கள் மீது…இப்போது வரை 'வேட்டையாடு விளையாடு' படத்தின் ரிரிலீசுக்குக் கிடைத்துள்ள வரவேற்பில் சிலிர்ப்பும், உற்சாகமும் கிடைக்கிறது. அதிகமான அன்பும், சக்தியும் நமது உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு, அன்பே சிவம்,” என லோகேஷ் நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார்.