நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ஹனுமன். கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏற்கனவே இந்த படம் மே 12ம் தேதி தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதங்களால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியே குறித்து தெரிவித்துள்ளனர். ஹனுமன் படம் 2024ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.