நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படம் வெளியாகி ஒரு வருடம் கழிந்த நிலையில் தற்போது இயக்குனர் கொரட்டாலா சிவா டைரக்சனில் தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் மகளான ஜான்வி கபூர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சாய் பல்லவியும் நடிக்கிறார் என்கிற ஒரு தகவல் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படம் துவங்கப்பட்ட சமயத்தில் இந்த படத்தின் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக சாய்பல்லவி தான் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டு வந்தது. பின்னர் சாய் பல்லவி இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர்தான் ஜான்வி கபூர் இந்த படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இந்த நிலையில் சாய்பல்லவி இந்த படத்தில் நடிக்கிறார் என இப்போது ஒரு தகவல் கிளம்பியதற்கு காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.
அதாவது இந்த படத்தில் இதுவரை படமாக்கப்பட்ட சில காட்சிகளை தனது குழுவினருடன் போட்டுப் பார்த்துள்ளார் இயக்குனர் கொரட்டாலா சிவா. அப்போது ஜான்வி கபூர் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார் என்று உதவி இயக்குனர்கள் பலரும் பாராட்டினாலும், இதே கதாபாத்திரத்தில் நாம் ஏற்கனவே பேசியபடி சாய்பல்லவி ஒப்பந்தமாகி நடித்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கருத்து கூறியுள்ளார்கள்.
கொரட்டாலா சிவாவுக்கும் சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்ய மனம் இருந்தாலும் இந்த படத்தின் ஹிந்தி விற்பனை உரிமையையும் மனதில் வைத்து தான் அவர் ஜான்வி கபூரை ஒப்பந்தம் செய்தார். ஆனால் இப்படி இயக்குனரும் அவரது உதவியாளர்களும் பேசிக் கொண்ட பேச்சு தான் வெளியே கசிந்து வெவ்வேறு விதமாக உருமாறி சாய்பல்லவி இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலாக தற்போது வெளியே பரவியுள்ளது என்று படக்குழுவிர் தரப்பில் சிலர் கூறியுள்ளனர்.