ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
பத்திரிகைகள், இணையதளங்கள், டிவி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் என கடந்த சில பல நாட்களாகவே கமல்ஹாசன், விஜய் ஆகியோர்தான் செய்திகளில் அதிகம் இடம் பெற்று வருகிறார்கள். கமல்ஹாசன் நடித்த 'வேட்டையாடு விளையாடு' படத்தின் ரீ--ரிலீஸ், 'புராஜக்ட் கே' படத்தில் கமல்ஹாசன் இணைந்தது, விஜய்யின் கல்வி உதவி வழங்கும் விழா, அவரது பிறந்தநாள் கொண்டாட்டம், 'லியோ' படத்தின் முதல் சிங்கிள் 'நா ரெடி' என கமல், விஜய் இருவரும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி டிரென்டிங்கில் வந்து போகிறார்கள்.
கமல்ஹாசன் இணைந்துள்ள 'புராஜக்ட் கே' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் வரப் போகிறது, விஜய் நடித்து வரும் 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதிதான் வெளியாகப் போகிறது. ஆனால், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்திற்கு இன்னம் எந்தவிதமான பெரிய அப்டேட்டும் வெளியாகாமல் இருப்பது ரஜினி ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. படம் வெளியாக இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில் முதல் சிங்கிள், அல்லது டீசர் கூட எதுவும் வரவில்லையே என காத்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் தவிர கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பெரிய நட்சத்திரக் கூட்டமே நடிக்கிறது. பான் இந்தியா படமாக பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய படத்தின் அப்டேட் வந்தால்தான் கமல், விஜய் ரசிகர்களைப் போல ரஜினி ரசிகர்களும் கொண்டாட முடியும்.