லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரையில் மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் போஸ் வெங்கட். பின்னர் வெள்ளித்திரையில் பயணமான அவர் தலைநகரம், சிவாஜி, கவண், சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இயக்குனராகவும் பயணித்து வரும் அவர் கன்னிமாடம் படத்தை தொடர்ந்து தற்போது மாபொசி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் போஸ் வெங்கட்டின் மூத்த சகோதரியான வளர்மதி மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரது அண்ணனான ரங்கநாதன் என்பவர் அறந்தாங்கியில் இருந்து சென்னை வந்தார். வந்த இடத்தில் அவருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஒரேநாளில் அக்கா, அண்ணனை பறிகொடுத்த இச்சம்பவம் போஸ் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.