மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் |
தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த 2017ம் ஆண்டு போதைப் பொருள் பயன்பாடு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போதைப் பொருட்களை சப்ளை செய்ததாகவும், அதைப் பயன்படுத்தியதாகவும் 15க்கும் மேற்பட்ட பிரபலங்கள் போதைப் பொருள் தடுப்புப் புரிவின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் சிக்கினர். அதைத் தொடர்ந்து சில சினிமா பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர்.
அதைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, நடிகர் ராணா டகுபட்டி, சுப்பராஜு, தருண், நவ்தீப், நடிகை சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்கள் விசாரணை செய்யப்பட்டனர். அந்த போதைப் பொருள் விவகார வழக்கே இன்னும் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் மீண்டும் ஒரு விவகாரம் பத்து நாட்களுக்கு முன்பு வெடித்தது.
ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தைத் தெலுங்கில் வெளியிட்ட தயாரிப்பாளர் கேபி சவுத்ரி என்கிற சுங்கர கிருஷ்ணபிரசாத் சவுத்ரி கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 82 கிராம் போதைப் பொருட்களும் கார், போன் உள்ளிட்ட 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவருடைய தொலைபேசி அழைப்புகளைப் பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆகியோரிடம் அவர் அடிக்கடி பேசியது தெரிய வந்துள்ளது. அவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிடாமல் அது பற்றி விசாரணையை காவல் துறை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, தெலுங்கு பிக் பாஸ் பிரபலம் ஒருவர், அம்மா - மகள் நடிகைகள் என சிலரது பெயர்கள் டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
2017 போதைப் பொருள் விவகாரம் போல இந்த 2023 போதைப் பொருள் விவகாரமும் பெரிய அளவில் இருக்கலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.