ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மலையாள திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர் நடிகர் பஹத் பாசில். சமீபகாலமாக தமிழ், தெலுங்கிலும் நுழைந்து விக்ரம் மற்றும் புஷ்பா ஆகிய படங்களின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை இங்குள்ள ரசிகர்களிடமும் பெற்றுள்ளார். இதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பஹத் பாசில். இந்த படம் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இவர் மலையாளத்தில் நடித்துள்ள தூமம் திரைப்படம் இதற்கு முன்னதாக வரும் ஜூன் 23ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கன்னடத்தில் லூசியா உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் பவண்குமார் இயக்கியுள்ளார். கன்னட இயக்குனர் என்றாலும் இந்த படம் நேரடி மலையாள படமாகவே உருவாகியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஆக உருவாகி உள்ளது. அந்த வகையில் ஆறு நாட்கள் இடைவெளியில் பஹத் பாசில் ஹீரோ, வில்லன் இருவித கதாபாத்திரங்களில் நடித்துள்ள இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாவது பஹத் பாசில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.