விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக்: தமிழில் மட்டும் தோல்வி அடைந்த பாண்டவர்கள் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 3 கதைகள் | கைதி 2 படத்தில் இடம்பெறும் விக்ரம் படத்தின் 3 எல்சியு கேரக்டர்கள் | அஜித்துக்கு ஜோடியாகும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி | கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'லியோ'. இன்று(ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' வெளியாக உள்ளது. இதனிடையே, நேற்று நள்ளிரவில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
பனிமலை பின்னணியில் விஜய் ஆவேசத்துடன் சுத்தியலால் யாரையோ அடித்துத் தாக்குவது போலவும், பின்னாடி ஓநாய் ஒன்றும் கடும் கோபத்துடன் இருக்க, சுத்தியலிலிருந்து ரத்தம் தெறிக்க, யாரோ ஒருவரது கைவிரல்கள் ஒரு ஓரத்தில் இருக்க, அடி வாங்கிய அந்த யாரோ ஒருவரது இரண்டு பற்கள் பறக்க போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் உள்ள டிசைன், அமெரிக்க வெப் தொடரான 'கேம் ஆப் த்ரோன்ஸ்'--ல் உள்ள ஜான் ஸ்னோ என்ற கதாபாத்திரத்தின் போஸ்டர் டிசைன் போல உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அக்கதாபாத்திரத்தில் கிட் ஹாரிங்டன் என்பவர் நடித்துள்ளார். அந்த போஸ்டரில் கத்தி ஒன்றுடன் அவர் நிற்க, கூடவே ஓநாய் ஒன்றும் இருப்பதால் இந்த ஒப்பீட்டை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.