நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
வாரிசு படத்தில் விஜய் பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் லியோ படத்திலும் நான் ரெடி என்ற பாடலையும் பாடியுள்ளார். இந்த பாடலை விஜய்யுடன் இணைந்து பிக்பாஸ் பிரபலம் அசல் கோலார் என்பவரும் பாடி இருக்கிறார். இவர் ஏற்கனவே சினிமாவில் பல பாடல்களை பாடி உள்ளார். இந்த பாடல் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்.
மேலும் இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து 2000 நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளார்கள். அதோடு இந்த பாடலில் ஒரு நிமிடத்திற்கு மேலாக ஒரே ஷாட்டில் விஜய் நடனம் ஆடி இருக்கிறார். அதிலும் முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு வித்தியாசமான நடன அசைவுகளையும் இந்த பாடலில் அவர் வெளிப்படுத்தி இருப்பதாகவும் லியோ படக் குழுவில் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த நான் ரெடி பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.