சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ், தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற பின்பும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் 'இந்தியன் 2' படத்திலும், தெலுங்கில் 'பகவாந்த் கேசரி, சத்யபாமா' ஆகிய படங்களிலும் படத்திலும் நடித்து வருகிறார்.
இன்று காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் 'சத்யபாமா' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதற்காக நடந்த விழாவில் காஜல் அகர்வால் பேசகையில், “தெலுங்கு சினிமா நான் பிறந்த ஊர் மாதிரி. தெலுங்கு ரசிகர்கள்தான் நிஜமாகவே சிறந்தவர்கள். உங்களால்தான் நான் இங்கு இருக்கிறேன். உங்கள் ஆதரவு இல்லாமல், வரவேற்பு இல்லாமல் உங்கள் அன்பு இல்லாமல் இப்படி இருக்க முடியாது,” என்று பேசினார்.
2007ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'லட்சுமி கல்யாணம்' என்ற படத்தின் மூலம்தான் காஜல் அகர்வால் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். 2008ல் தமிழில் வெளிவந்த 'பழனி' படம் மூலம் இங்கு அறிமுகமானவர் தொடர்ந்து 16 வருடங்களாக கதாநாயகியாகவே தொடர்கிறார்.
இன்று காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.