ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆதி புருஷ். க்ரீத்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சிரியஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு நாட்கள் வசூல் உலகமெங்கும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் நாள் உலகளவில் ரூ.140 கோடி வசூல், இரண்டாம் நாள் உலகளவில் ரூ. 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.




