வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பின்னணியும் பாடி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கடந்த மாதம் கோலாலம்பூரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அடுத்தபடியாக ஜூலை ஒன்றாம் தேதி கோவையில் ஆண்ட்ரியா லைவ் இன் கோவை என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த போகிறார். அது குறித்த தகவலை அவர் கூறுகையில், முதல் முறையாக கோவையில் தனி இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறேன். வருகிற ஜூலை ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் நடைபெற உள்ளது. இளையராஜா முதல் பல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாட உள்ளேன். அதோடு நான் பாடியதில் ஹூ இஸ் தி ஹீரோ, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உள்பட பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. மேலும், எந்த விஷயமும் எளிதில்லை. அனைத்திலுமே ஒருவித கஷ்டம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மியூசிக் படித்து வருகிறேன். அதுதான் இப்போது என்னை பாட வைக்கிறது. எனது இசை நிகழ்ச்சிக்கு கோவையில் நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ள ஆண்ட்ரியா, ஊ சொல்றியா மாமா என்ற பாடலையும் பாடி தனது பேட்டியை முடித்துக் கொண்டுள்ளார்.