சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் |
ஒம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படம் நாளை(ஜூன் 16) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகுதான் இந்திய அளவிலான வசூல் 1000 கோடி என்ற சாதனையைப் படைக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், பதான்'' ஆகிய படங்களும் அந்த சாதனையைப் படைத்தன. அடுத்து அப்படிப்பட்ட சாதனையை 'ஆதிபுருஷ்' படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கான முன்பதிவு வட இந்திய மாநிலங்களிலும், தெலுங்கு மாநிலங்களிலும் சிறப்பாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிவிஆர் தியேட்டர்களில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலாக மட்டும் சுமார் 80 கோடிக்கும் அதிகமாகவும், முதல் வார இறுதியில் 200 கோடி வரையிலும் இப்படம் வசூலிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், இப்படத்திற்கு தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தாமல் விட்டுள்ளார்கள். இது பிரபாஸ் ரசிகர்களிடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட படத்தை எடுத்துவிட்டு திருப்பதியில் மட்டும் விழாவை நடத்திவிட்டு மற்ற மாநிலங்களில் எதையும் செய்யாததும் வினியோகஸ்தர்களிடையே ஏமாற்றத்தைத் தந்துள்ளது.