அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சென்னை : குடும்ப பிரச்னை காரணமாக சினிமா பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டில், தங்கம், வைர நகைகள் திருடு போனதாக பொய் புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் ஜேசுதாஸ். இவரது மகன் விஜய் ஜேசுதாஸ். பாடகராகவும், நடிகராகவும் உள்ளார். இவர், சென்னை, ஆழ்வார்ப்பேட்டை, 3வது தெருவில் மனைவி தர்ஷனா மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். தர்ஷனா, பிப்., 18ல், 'வீட்டு லாக்கரில் இருந்த, 60 சவரன், தங்கம், வைர நகைகள் திருடுபோய் உள்ளன. வேலைக்கார்கள் மேனகா, பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது' என, அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார், விஜய் ஜேசுதாஸ் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், ஆந்திராவைச் சேர்ந்த விஜயலட்சுமி, மேனகா உள்ளிட்ட, 11 பேரிடம் விசாரித்தனர். இவர்களுக்கு, லாக்கரின் கடவு எண் தெரியவில்லை; லாக்கரும் உடைக்கப்படவில்லை. அப்புறம் எப்படி நகை திருடு போயிருக்கும் என்பது குறித்து, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
லாக்கரின் கடவு எண், விஜய் ஜேசுதாஸ், தர்ஷனா ஆகியோருக்கு மட்டுமே தெரியும். இதுபற்றி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, இருவருக்கும் போலீசார் பல முறை தகவல் அனுப்பினர். விஜய் ஜேசுதாஸ், துபாயில் உள்ளார்; தர்ஷனாவும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கணவன், மனைவி இருவருக்கும் பிரச்னை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பொய் புகார் அளிக்கப்பட்டு இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் நகை திருடுபோனதாக நாடகமாடுகின்றனரா அல்லது குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் கைவரிசை காட்டினரா என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். விஜய் ஜேசுதாஸ், தர்ஷனா ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் மட்டுமே, இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் என, போலீசார் தெரிவித்தனர்.