டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்திற்காக ஒரு பாடல் காட்சி பிரம்மாண்டமாகப் படமாகி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இதற்காக மிகப் பெரிய அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1000 நடனக் கலைஞர்களுடன் விஜய் நடனமாடும் பாடல் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
விஜய் படங்களில் எப்போதுமே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெறும். அதில் சில அதிரடிப் பாடல்களும் இருக்கும். அப்படியான ஒரு பாடல்தான் தற்போது படமாக்கி வருகிறார்கள். லோகேஷ், அனிருத், விஜய் கூட்டணியில் வந்த 'மாஸ்டர்' படத்தில் 'வாத்தி கம்மிங்' சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த வரிசையில் தற்போது படமாகி வரும் 'லியோ' பாடலும் இடம் பெறும் என்கிறார்கள்.
அடுத்த சில வாரங்களில் 'லியோ' படப்பிடிப்பு நிறைவுக்கு வர உள்ளது. அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ளது. ஆனால், இப்போதே படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.