'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'. ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஜூன் 16ம் தேதி வெளியாகிறது. இன்று (ஜூன் 6) இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெறுகிறது. இதற்காக திருப்பதி சென்ற பிரபாஸ், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்குள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா யுனிவர்சிட்டி மைதானத்தில் விழா நடக்கிறது. சுமார் ஒரு லட்சம் பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படக்குழு சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ஆதிபுருஷ் படம் வெளியாகும் தியேட்டர்களில் அனைத்துக் காட்சிகளிலும் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கு சிலர் வரவேற்பும், சிலர் விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர்.




