அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. 'இந்தியன்' படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. லைகா தயாரிக்கும் இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவும் இந்தியன்-2 படத்தில் நடித்துள்ளதாகவும், அவரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இவர் நடித்திருக்கும் செய்தியை படக்குழு ரகசியமாக வைத்துள்ளதாகவும், படம் வெளியீட்டின்போது அதனை அறிவிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதனை எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவரின் அடுத்தடுத்த படங்களின் பட்டியலை குறிப்பிட்டார். 'பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2, கேம் சேஞ்சர் படங்களில் நடித்துள்ளேன். அதுபோக, முக்கியமான ஒரு படம்' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த முக்கியமான படம் குறித்த கேள்விக்கு 'அதனை காலம் சொல்லும். நான் சொல்லக் கூடாது' என்றார். இதனையடுத்து எஸ்.ஜே.சூர்யா, இந்தியன்-2 படத்தை தான் குறிப்பிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.