அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
இயக்குனர் அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‛பூல் புலையா-2'. கியாரா அத்வானி, தபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆவதாக தகவல் வெளியானது. அந்த தகவலின் படி, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாக சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார், அந்த பேட்டியில் அவர்கூறியது "இதன் ரீமேக் உரிமையை பெற்றுள்ளேன். இந்த படம் நல்ல கதை என்று நம்புகிறேன். யார் நடிக்கிறார்கள், இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்".
கடந்த சில வருடங்களாக தென்னிந்திய படங்களை தான் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹிந்திப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.