'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'கடலோர கவிதைகள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேகா. அதன் பிறகு புன்னகை மன்னன், நம்ம ஊரு நல்ல ஊரு, சொல்வதெல்லாம் உண்மை, ஆண்களை நம்பாதே, எங்க ஊரு பாட்டுக்காரன், சின்னமணிக்குயிலே, செண்பகமே செண்பகமே, ராசாவே உன்னை நம்பி, என் பொம்முட்டி அம்மாவுக்கு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். 1986ல் அறிமுகமான ரேகா, 2000மாவது ஆண்டில் இருந்து குணசித்ர நடிகையாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 20 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார். 'மிரியம்மா' என்ற இந்த படத்தில் டைட்டில் ரோலான மிரியம்மாவாக நடிக்கிறார்.. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்குகிறார். ரேகாவுடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். 72 பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது.