திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
“தமிழ்ப் படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, தமிழ்ப் படம் 2, ஏலே, மண்டேலா, ஜகமே தந்திரம்,' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த நிறுவனம் ஒய் நாட் ஸ்டுடியோஸ். அந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான சஷிகாந்த் 'டெஸ்ட்' என்ற படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.
அவரது இயக்கத்தில் உருவாகும் இந்த முதல் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், லாஸ்யா நாகராஜ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. மறக்க முடியாத சில படங்களைக் கொடுத்தவர்கள் அப்புகைப்படத்தில் இருப்பதால் ரசிகர்கள் பலரும் அதைப் பகிர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
'ரன்' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த மாதவன், மீரா ஜாஸ்மின், 'ஆயுத எழுத்து' படத்தில் இணைந்து நடித்த மாதவன், சித்தார்த், மற்றும் அவர்களுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் நயன்தாரா என சில பல நினைவுகளை அப்புகைப்படம் ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் மீண்டும் தமிழில் நடித்து வருகிறார்.
பான்இந்தியா படமாக வெளிவர உள்ள இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒரு படம். சக்தி ஸ்ரீ கோபாலன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.