‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் வில்லனாக நடித்தவர் ரே ஸ்டீவன்சன். அவர் ஞாயிறன்று மரணமடைந்ததாக அவர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அவருக்கு வயது 58.
அயர்லாந்து நாட்டிலுள்ள லிஸ்பர்ன் என்ற ஊரில் 1964ம் ஆண்டு பிறந்தவர் ரே. பிரிஸ்டல் ஓர்டு விக் தியேட்டர் பள்ளியில் நடிப்பைப் பயின்ற பிறகு பிரிட்டிஷ் டெலிவிஷனில் வேலை பார்த்தவர். 1998ல் வெளிவந்த 'த தியேரி ஆப் பிளைட்' படத்தில் அறிமுகமானார்.
மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 'தோர்' படத்தின் மூன்று பாகங்களில் வோல்ஸ்டாக் கதாபாத்திரத்தில் நடித்தவர். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் பிரிட்டிஷ் கவர்னர் ஸ்காட் பக்ஸ்டன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய வில்லத்தன நடிப்பிற்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
அவரது மறைவு குறித்து இயக்குனர் ராஜமௌலி, அதிர்ச்சி… “இந்த செய்தியை நம்ப முடியவில்லை. செட்டில் எங்களுக்கு மிகுந்த ஆற்றலையும், துடிப்பையும் கொண்டு வந்தவர். அது அனைவருக்கும் பரவிய ஒன்று. அவருடன் பணிபுரிந்தது முழு மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள். அவருடைய ஆன்மா அமைதியடையட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.