என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் |
உடல்நலம் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு(71) சிகிச்சை பலன் இன்றி காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். ஹீரோவாக, குணச்சித்ர நடிகராக அசத்தி வந்த அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
ஸ்ரீ சரத் பாபு ஜி பல்துறை மற்றும் படைப்பாற்றல் மிக்கவர். அவரது நீண்ட திரைப்பட வாழ்க்கையில் பல மொழிகளில் பல பிரபலமான படைப்புகளுக்காக அவர் நினைவுகூறப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.
கமல்
சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி.
ரோஜா செல்வமணி
அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
ராதிகா சரத்குமார்
சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகுந்த வருத்தமளிக்கிறது. உங்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் சரத்பாபு.
ஜூனியர் என்டிஆர்
பழம்பெரும் நடிகர் சரத்பாபு காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.
ரவி தேஜா
மென்மையான இதயம், சிரிக்கும் உள்ளம் கொண்ட சிறந்த மனிதர் சரத்பாபு. உங்களை மிஸ் செய்கிறோம். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! ஓம் சாந்தி.
அசோக் செல்வன்
கனிவான இதயம், இனிமையான மற்றும் சிறந்த மனிதர். அனைவரையும் சமமாகவும் மரியாதையாகவும் நடத்தினார். உங்களை மிஸ் பண்ணுவேன் சார். நிம்மதியாக இருங்கள். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக போர்தொழில் டீசர் வெளியீடு நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நானி
சரத்பாபுவின் குரல், இருப்பு மற்றும் அவரது நடிப்பில் அரவணைப்பு எப்போதும் போற்றப்படும். நன்றி ஐயா.