‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
ஐதராபாத் : நடிகர் சரத்பாபு இறந்ததாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுநேரத்தில் அவரது சகோதரி அதனை மறுத்துள்ளார். மேலும் சரத்பாபு நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ஹீரோவாக, குணச்சித்ர நடிகராக ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் சரத்பாபு (72). 1977ம் ஆண்டு 'பட்டினப்பிரவேசம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மெட்டி, முள்ளும் மலரும், உதிரிபூக்கள், சட்டம், சங்கர் குரு வேலைக்காரன், முத்து, அண்ணாமலை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் என 200 திரைப்படங்களிலும், 'டிவி' தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்பு நோய் அழற்சி பிரச்னை காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று(மே 3) அவர் காலமானதாக பெரும்பாலான ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சமூகவலைதளங்களிலும் அவர் இறந்ததாக செய்திகள் பரவின. கமல், குஷ்பு உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். சற்றுநேரத்திலேயே அவர் இறக்கவில்லை என சரத்பாபுவின் சகோதரி செய்தி வெளியிட்டார்.
நலமுடன் உள்ளார்
இதுதொடர்பாக சரத்பாபுவின் சகோதரி வெளியிட்ட செய்தியில், ‛‛சமூக வலைதளங்களில் சரத்பாபு பற்றிய அனைத்து செய்திகளும் தவறாக வருகின்றன. அவர் ஓரளவுக்கு குணமடைந்து வேறொரு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் அவர் பூரணமாக குணமடைந்து மீடியாக்களிடம் பேசுவார் என்று நம்புகிறேன். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்,'' என தெரிவித்துள்ளார்.