சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் மாஸ்டர். இந்த படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், ஏ.எல். விஜய் இயக்கிய தலைவி படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், சார்பட்டா பரம்பரை பட இயக்குனர் பா.ரஞ்சித், மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, அப்படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஜெய் பீம் படத்தில் நடித்த மணிகண்டனுக்கு துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட இருக்கிறது.