ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் |
மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தருண். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பின்னர் ஹீரோவாக நடித்தார். தமிழில் 'காதல் சுகமானது', 'புன்னகை தேசம்', 'எனக்கு 20 உனக்கு 18' படங்களில் நடித்தார். தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த தருண் இப்போது வெப் சீரிஸ் ஒன்றின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதோடு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருகிறார். இந்த தகவலை தருணின் தாயாரும், நடிகையுமா ரோஜா ரமணி வெளியிட்டிருக்கிறார்.