100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
தில்லு முல்லு(2013), மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் இஷா தல்வார். தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛உப்பளத்தில் வைத்து ஆக் ஷன் காட்சி ஒன்றை படமாக்கினர். அப்போது இருட்டில் வைத்திருந்த வெடிபொருள் வெடித்ததில் எனது இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. கண்ணை திறக்க முடியவில்லை, வலியால் துடித்தேன். அப்போது மருத்துவரிடம் உடனடியாக சென்று சிகிச்சை பெற்றேன். மூன்று நாட்கள் என்னால் கண்ணை திறக்க முடியவில்லை. அந்தநாட்களில் இருளில் இருந்தது போன்று உணர்ந்தேன். மருத்துவர்கள் உதவியால் நலமாகி வந்துள்ளேன்'' என்றார் இஷா தல்வார்.