காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிண்டி கவர்னர் மாளிகையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களின் அம்மாக்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இதில் வறுமையான சூழ்நிலையில் இருந்து தன் மகளை தனி ஆளாக வளர்த்து நடிகையாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணி அம்மையாருக்கு சிறந்த அன்னை விருதை கவர்னர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவி லட்சுமி ரவியும் இணைந்து வழங்கினார்கள். இவருடன் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் தாய் என்.நாகலட்சுமி, பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் வீரர் பொன்ராஜின் தாய் ஞானசுந்தரி, திருநங்கை கிரேஸ் பானுவின் தாய் ஹீனா உள்ளிட்ட 8 பேருக்கு சிறந்த அன்னை விருது வழங்கப்பட்டது.