'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, என வெகு சில படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்தார்... பின்னர் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா, மலையாளத்தில் பிரித்விராஜுடன் 'கூடே' மற்றும் தனது கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து 'ட்ரான்ஸ்' ஆகிய படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து நானி நடித்த 'அண்டே சுந்தரனிகி' என்கிற படம் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் நஸ்ரியா.
இன்னொரு பக்கம் அவர் படங்களில் நடிக்காத சமயத்தில் கூட சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்தார். தன்னை பற்றிய செய்திகள், தனது கணவர் மற்றும் தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றை, தொடர்ந்து சோசியல் மீடியா மூலம் ரசிகர்களின் பார்வைக்கு கடத்தி வந்தார் நஸ்ரியா. லட்சக்கணக்கான பாலோயர்களை கொண்ட நஸ்ரியா, தற்போது சோசியல் மீடியாவின் அனைத்து தளங்களில் இருந்தும் ஒரு பிரேக் எடுத்துக் கொள்வதாக திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து சோசியல் மீடியாக்களில் இருந்தும் பிரேக் எடுத்து கொள்கிறேன். இதுதான் நேரம்.. உங்களுடைய அன்பையும் குறுஞ்செய்திகளையும் இங்கே நான் மிஸ் பண்ணுவேன். மீண்டும் விரைவில் சந்திப்போம். உறுதி அளிக்கிறேன்..” என்று கூறியுள்ளார்.
படங்களில் பிசியாக நடிக்கும் நடிகைகளே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் படம் எதிலும் நடிக்காத நஸ்ரியா இப்படி திடீரென சோசியல் மீடியாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.