ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு முன்பே துவங்கப்படுவதாக சொல்லப்பட்ட இந்த படம், தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது கொடைக்கானல் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.
இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக பணியாற்றி வரும் சுப்ரீம் சுந்தர், சூர்யா, சிவா உள்ளிட்ட குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு கொடைக்கானல் படப்பிடிப்பு நிறைவடைந்த தகவலை தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா பத்துக்கு மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானல் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து விரைவில் சென்னையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.