தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ம் வெளிவந்த திரைப்படம் 'புஷ்பா' பாகம் 1. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் பிஸ்னஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக படத்தின் ஆடியோ உரிமையை ரூ. 45 கோடிக்கு மேல் டி.சீரியஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய படங்களிலேயே இது தான் அதிக விலைக்கு விலை போனது என்று சொல்கிறார்கள்.