பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து தற்போது இயக்குனர் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் மாமன்னன். வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகின்ற ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் மாரி செல்வராஜ் அளித்த பேட்டியில், "உதயநிதி அழைத்து அவரின் கடைசி படத்தை என்னை இயக்குமாறு கேட்டுக்கொண்டார். நான் அப்போது துருவ் விக்ரம் மற்றும் தனுஷ் படங்களின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தேன். அதனால் உதயநிதி தனுஷ் மற்றும் விக்ரம் இருவருடனும் தனிப்பட்ட முறையில் என் கடைசி படத்தை மாரி செல்வராஜ் இயக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அதற்கு இருவரும் மாமன்னன் படத்தை முதலில் இயக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.