அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பொன்னியின் செல்வனில் குந்தவையாக மிரட்டிய த்ரிஷாவின் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் 'தி ரோட்'. பொன்னியின் செல்வனுக்கு பிறகு விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வரும் திரிஷா தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்ட நிலையில், அவர் முன்பிருந்து சம்பளத்தில் புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றிய படம் 'தி ரோட்'.
இந்த படம் ஹீரோயின் சப்ஜெக்ட் ஆக்ஷன் படம். இதில் அவருடன் 'சார்ப்பட்டா' புகழ் டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கி உள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் அருண் வசீகரன் கூறியதாவது: திரிஷாவின் திரைப்பயணத்தில் "தி ரோட்" திரைப்படம் மிகப்பெரியப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இரு பாகங்களுக்குப் பிறகு இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் படமாக்கி உள்ளோம். மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.