நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு |
தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் இடையே மூன்று சங்கம் உள்ளது. இருப்பினும் இந்த சங்கம் தான் எல்லாவற்றிலும் பிரதானமாக முன்னிலை வகிக்கிறது.
இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. 2023-26ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இதில் தற்போதைய தலைவராக உள்ள தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியும், மன்னன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணியும் களமிறங்கினர்.
முரளி தலைமையிலான அணியில் தலைவராக தேனாண்டாள் முரளி, துணைத் தலைவர்களாக லைகா தமிழ்க் குமரன், அர்ச்சனா கல்பாத்தி போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசனும், பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச் செயலாளர் பதவிக்கு சவுந்தரபாண்டியன் போட்டியிட்டனர்.
அதேப்போன்று மன்னன் தலைமையிலான அணியில் தலைவராக மன்னனும், துணைத் தலைவர்களாக மைக்கேல் ராயப்பன் மற்றும் விடியல் ராஜூ போட்டியிட்டனர். செயலாளர்களாக கமீலா நாசர், தேனப்பன், பொருளாளராக ரவீந்தர், இணை செயலாளராக மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டனர்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் 1406 பேர் ஓட்டளிக்க தகுதியான வேட்பாளர்கள். அதில் 1111 ஓட்டுகள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை இன்று காலை சென்னை அடையாறில் உள்ள மகளிர் கல்லூரியில் காலை 10 மணிக்கு துவங்கியது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் தலைமையில் இந்த ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இதில் தலைவராக போட்டியிட்ட முரளி ராமசாமி வெற்றி பெற்று மீண்டும் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவர் 615 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மன்னன் 482 ஓட்டுகள் பெற்றார்.
இதேப்போன்று முரளி அணியில் போட்டியிட்ட சந்திரபிரகாஷ் ஜெயின் பொருளாளராக வெற்றி பெற்றுள்ளார். செயலாளர் பதவிகளுக்கு போட்டியிட்ட ராதாகிருஷ்ணன், கதிரேசனும் வெற்றி பெற்றுள்ளனர். முக்கிய பொறுப்புகளில் முரளி ராமசாமி அணியை சார்ந்தவர்களே முன்னிலை வகிக்கின்றனர்.