துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பெண்களை முன்னிலைப்படுத்தும் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருவதில் முக்கிய இடத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி படங்களுக்கு பிறகு அவர் நடித்து வெளிவர உள்ள படம் 'பர்ஹானா'. இந்த படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது : 3 பெண்களின் தாயான ஒரு இஸ்லாமிய பெண்ணின் கதை இது. இளம் வயதிலேயே இப்படி நடிக்கலாமா என்கிறார்கள். நல்ல கேரக்டர் என்றால் 100 குழந்தைக்கு தாயாகவும் நடிப்பேன். வித்தியாசமான கதைகளில் விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே என் இலக்கு. இந்த படத்தில் இஸ்லாமிய பெண் என்பதால் ஒரு இஸ்லாமிய தோழியை என் வீட்டுக்கு அழைத்து அவர்களது பழக்க வழக்கங்கள், நடைமுறைகளை கற்றுக் கொண்டேன். முறைப்படி தொழுகை நடத்தவும் கற்றுக் கொண்டேன். இந்த படம் இஸ்லாமிய சமூகத்தையும், இஸ்லாமிய பெண்களையும் உயர்த்தும் படமாக இருக்கும்.
ஆச்சாரமான இஸ்லாமிய குடும்பத்து பெண்ணுக்கு வறுமை. வேறு வழியில்லாமல் அவர் கால் செண்டருக்கு வேலைக்கு செல்கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து குடும்பத்தையும், தன்னையும் காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை. பெண்கள் எந்த சூழ்நிலையிலும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படம். என்றார்.