ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என அவரது ரசிகர்கள் கடந்த ஐந்து மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் படத்தை இயக்காதது உறுதியான நிலையில் அடுத்து இயக்கப் போவது மகிழ்திருமேனி என செய்திகள் வெளியாகின.
ஆனால், தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடமிருந்து இதுவரையில் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. மகிழ்திருமேனி கடந்த சில மாதங்களாகவே கதை விவாதத்தில் இருப்பதாகத் தகவல் வெளியானது. திரைக்கதை இன்னும் இறுதி வடிவத்தை எட்டவில்லை என்கிறார்கள்.
அஜித் நடித்த 'துணிவு', விஜய் நடித்த 'வாரிசு' ஒரே சமயத்தில்தான் வெளியாகின. விஜய் அடுத்து 'லியோ' படத்தில் நடிக்கப் போய் ஏறக்குறைய படப்பிடிப்பை முடிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள். அதே சமயம் அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்புக்கு இவ்வளவு நாட்களாகிவிட்டது.
வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் வர உள்ளது. அன்றைய தினமாவது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என அஜித் ரசிர்கள் எதிர்பார்க்கிறார்கள்.