23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
ஒளிப்பதிவாளராக திகழ்ந்த ராஜீவ் மேனன், ‛மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளம் மையம்' போன்ற படங்களையும் இயக்கி உள்ளார். சமீபத்தில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அரசு அதிகாரி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. ரசிகர்களை மட்டும் அல்லாமல் இயக்குனர்களையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் படத்தில் ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இன்னும் இவரை தெலுங்கு படங்களில் நடிக்க பல இயக்குனர்கள் அணுகி வருகிறார்களாம்.