வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
உலக புகழ்பெற்ற 'சிட்டாடல்' வெப் தொடர் வரும் 28ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இதில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேனன், ஸ்டான்லி துச்சி, லெஸ்சி மான்வில்லே உள்பட பலர் நடித்தருக்கிறார்கள். இந்த தொடர் தற்போது ஆங்கிலத்தில் தயாராகி இருந்தாலும் இதே தொடர் உலகம் முழுக்க பல மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. ஹிந்தியில் ரீமேக் ஆகும் இந்த தொடரில் சமந்தாவும், வருண் தவானும் நடிக்கிறார்கள்.
சிட்டாடல் தொடரின் பிரிமியர் ஷோ லண்டனில் திரையிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உலகம் முழுக்க வெவ்வேறு மொழிகளில் நடிக்கும் நடிகர், நடிகைகள் லண்டனின் குவிந்துள்ளனர். இந்தியாவில் இருந்து சமந்தா, வருண் தவான் இயக்குனர்கள் ராஜ், டீகே, சீட்டாடல் இந்திய வெளியீட்டின் இணை எழுத்தாளர் சீதா ஆர்.மேனன், பிரைம் வீடியோ இந்தியாவின் டைரக்டர் சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் பிரைம் வீடியோவின் ஹெட் ஆப் இந்தியா ஒரிஜினல்ஸ் அபர்ணா புரோஹித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சாகுந்தலம்' பெரிய தோல்வி அடைந்துள்ளது. அந்த கவலைகளை மறந்து லண்டனில் உற்சாகமாக இருக்கிறார் சமந்தா. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்டாகிராமில் “லண்டனில் நடந்த குளோபல் பிரீமியர் ஆப் சிட்டாடலில், உலகின் மிகச் சிறந்த சிலவற்றில் ஒருவராக இருப்பதில் உண்மையிலேயே தாழ்மையுடன் இருக்கிறேன். அவர்களின் தோழமை, படைப்பாற்றல், திறமை, அன்பு, பகிரப்பட்ட பார்வை, கனவு ஆகியவை மிகவும் உத்வேகமாகவும், உற்சாகமாகவும் இருந்தது, இந்த அணி மற்றும் சிட்டாடல் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் உண்மையிலேயே அதிர்ஷ்டமாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்”என்று குறிப்பிட்டிருக்கிறார்.