ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
'பசங்க' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதுவரை பத்து படங்களை இயக்கிய பாண்டிராஜ் கடைசியாக இயக்கி வெளிவந்த படம் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்'. அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
அடுத்து அருள்நிதி நடிக்க உள்ள ஒரு படத்துக்கு கதை எழுத உள்ளார் பாண்டிராஜ். அதோடு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க பாண்டிராஜ் பேசி வருகிறாராம். இருவரும் இணைந்து 2016ல் வெளிவந்த 'கதகளி' படம் மிகவும் சுமாராகப் போன படம். அதற்குப் பிறகு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இணைய உள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
தற்போது விக்ரம் நடிக்க 'தங்கலான்' படத்தையும், சூர்யா நடிக்க 'கங்குவா' படத்தையும் தயாரித்து வரும் அந்நிறுவனத்தின் அடுத்த படமாக விஷால், பாண்டிராஜ் படம் இருக்கும் என்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரலாம்.