லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனரானார். தற்போது நடிகர் விஜயை வைத்து ‛லியோ' படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் இணைந்து புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தினை தேசிய விருது வென்ற பிரபல சண்டை பயிற்சி இயக்குனர்களான அன்பறிவ் இரட்டையர்கள் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. பயங்கர ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாக உள்ளதாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் சமுத்திரக்கனி தனது டுவிட்டர் பக்கத்தில் அன்பறிவ், லோகேஷ் கனகராஜ், அனிருத் படங்களை பகிர்ந்து, ‛வாழ்த்துகள் செல்லங்களே' என பதிவிட்டுள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.