9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

ரஜினிகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. தற்போது திருமணமானபின் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்திய மாதங்களில் ஹிந்தியில் அவர் நடித்த த்ரிஷ்யம் 2 மற்றும் கன்னடத்தில் அவர் நடித்த கப்ஜா ஆகிய படங்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ஒரு மிகப்பெரிய கூண்டில் பல வெளிநாட்டு பறவைகளை அடைத்து வைத்திருப்பது குறித்த வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா.
இது குறித்து அவர் கூறும்போது, “நீங்கள் ஒரு பறவைகளின் காதலனாக இருந்தால் அவற்றை இப்படி ஒரு கூண்டில் அடைத்து வைக்க கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பறவைகள் என்றாலே அவை சுதந்திரமானவை. இவ்வளவு நிறைய பறவைகள் எதற்காக ஒரு சிறிய கூட்டில்..? உங்களுக்கு பொறுப்பில்லையா மனிதர்களே? இது சட்டபூர்வமானது என்றாலும் சரிதானா? அவை ஒரு சிறிய கூண்டில் நாள் முழுவதும் அடைத்து வைத்திருக்கப்படுகின்றதே ஏன்? யாரோ சில விருந்தினர்கள் இதை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக தான்.. பறவைகள் அந்த கூண்டை உடைத்து பறக்க முயற்சிப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது” என்று தனது கண்டனத்தையும் அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரேயா.
இது குறித்து ஒரு சிலர் வெளியிட்டுள்ள கமெண்ட்டுகளில், இந்த பறவைகள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்றும் இவற்றை இந்திய சூழலில் தனியாக விட்டால் அவற்றால் உயிர் வாழ முடியாது என்றும், இந்த செயலுக்கு ஆதரவளிக்கும் விதமாக கூறி வந்தனர்.
இதுகுறித்து மீண்டும் ஸ்ரேயா கூறும்போது, “எதற்காக வெளிநாட்டில் இருந்து பறவைகளை இங்கே கொண்டு வந்து இப்படி கூண்டில் அடைக்க வேண்டும்..? பறவைகள் வர்த்தகத்தை முதலில் நிறுத்துங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.