லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் ப்ரஜின் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். ஆனாலும் கூட, இன்றுவரை அவர் சின்னத்திரையில் மட்டுமே வெற்றிகரமான கேரியரை வைத்துள்ளார். மோகன் ஜி இயக்கத்தில் ப்ரஜின் ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தில் நடித்திருந்தார். நல்ல கதையம்சம் கொண்ட அந்த படமானது அன்றைய நாளில் விமர்சன ரீதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து மோகன் ஜி இரண்டாவதாக இயக்கிய திரெளபதி படத்திலும் முதலில் ப்ரஜின் தான் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம். ஆனால், அந்த கதையின் மீது ப்ரஜினுக்கு சில கேள்விகள் எழுந்ததால் அதில் நடிக்காமல் விட்டுவிட்டார். இந்த தகவலை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ப்ரஜின் வெளியிட, சிலர் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறிவருகின்றனர். சிலர் ப்ரஜின் திரெளபதி படத்திலிருந்து விலகியது தெளிவான முடிவு என பாராட்டி வருகின்றனர்.